உத்தர பிரதேச முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளம்பெண் கைது


உத்தர பிரதேச முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளம்பெண் கைது
x

யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 24 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை,

உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் 10 நாட்களுக்குள் தனது பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், என்.சி.பி. தலைவர் பாபா சித்திக், கடந்த அக்டோபர் 12-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டதுபோல் யோகி ஆதித்யநாத்தும் கொல்லப்படுவார் என மும்பை போக்குவரத்து போலீசாரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து நேற்று மிரட்டல் வந்துள்ளது.

இந்த குறுஞ்செய்தியை அனுப்பியது யார் என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், 24 வயது இளம்பெண் பாத்திமா கான் என்பவருடைய எண்ணில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏ.டி.எஸ்.) அதிகாரிகள் மற்றும் உலாஸ்நகர் போலீசார் இணைந்து பாத்திமா கானின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள உலாஸ்நகர் பகுதியில் வசித்து வரும் பாத்திமா கான், பி.எஸ்.சி. தகவல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றுள்ளார். இருப்பினும், அவர் மனநிலை சரியில்லாதவர் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story