ஓடும் பஸ்சில் இளம்ஜோடி உல்லாசம்: வீடியோ வைரல் ஆனதால் பரபரப்பு


ஓடும் பஸ்சில் இளம்ஜோடி உல்லாசம்: வீடியோ வைரல் ஆனதால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 April 2025 4:15 AM IST (Updated: 23 April 2025 4:15 AM IST)
t-max-icont-min-icon

பஸ்சுக்குள் இருக்கையிலேயே உல்லாசம் அனுபவித்த காதல் ஜோடியை கண்டக்டர் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மும்பை,

மும்பையை அடுத்த நவிமும்பை மாநகராட்சி சார்பில் நகர பஸ்கள் இயக்கப் படுகின்றன. குளிர்சாதன வசதி கொண்ட மாநகராட்சி பஸ் ஒன்று நவிமும்பையை அடுத்த பன்வெலில் இருந்து கல்யாண் நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சில் சில பயணிகள் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த பஸ்சில் பயணம் செய்த சுமார் 20 வயதுடைய இளம்ஜோடி ஒன்று இருக்கையை நெருக்கமாக்கி கொண்டு அத்துமீற தொடங்கினர். ஒருகட்டத்தில், தாங்கள் பயணிப்பது பொது வாகனம் என்பதை மறந்தனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஊர்ந்து சென்ற பஸ்சில் அவர்களின் காமஉணர்ச்சி தறிகெட்டு ஓடியது. பஸ்சுக்குள் இருக்கையிலேயே உல்லாசம் அனுபவித்தனர். இதனை கண்டக்டர் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த உல்லாச காட்சியை பக்கவாட்டில் நெருங்கி சென்று கொண்டு இருந்த மற்றொரு பஸ்சில் பயணித்த பயணி ஒருவர் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் இதனை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.சுமார் 22 வினாடி ஓடும் இந்த வீடியோ வைரல் ஆனது. இந்த வீடியோவை பார்த்த நவிமும்பை மாநகராட்சி அதிகாரிகள் திடுக்கிட்டனர். ஓடும் பஸ்சில் நடந்த இந்த காமலீலை கடந்த 20-ந் தேதி நடந்துள்ளது. அவர்கள் காதல் ஜோடி என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பவத்தன்று பணியில் இருந்த கண்டக்டர், டிரைவரை மாநகராட்சி அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்தனர். காதல் ஜோடியின் மோசமான நடத்தையை தடுக்க தவறியதாக கண்டக்டரிடம் விளக்கம் கேட்டு, துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டனர். ஓடும் பஸ்சில் இளம்ஜோடி உல்லாசம் அனுபவித்த சம்பவம் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story