போலீஸ் வேலைக்காக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்ட இளம்பெண் திடீர் உயிரிழப்பு


போலீஸ் வேலைக்காக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்ட இளம்பெண் திடீர் உயிரிழப்பு
x

தோழிகளுடன் ஓடிக்கொண்டிருந்த ஆதித்யா திடீரென மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள தளிகுளம் குருட்டிபரம்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் ஆதித்யா (வயது 22) பட்டதாரியான இவர் போலீஸ் வேலைக்கு விணப்பித்திருந்தார். அது தொடர்பாக நடத்தப்பட்ட எழுத்து தேர்வில் கலந்து கொண்ட ஆதித்யா, அதில் தேர்ச்சி பெற்றார். ஆகவே அவர் உடல் தகுதி தேர்வுக்கு தயராகி வந்தார். இதற்காக தனது தோழிகள் சிலருடன் தினமும் மைதானத்திற்கு சென்று ஓட்ட பயிற்சி உள்ளிட்டவைகளை செய்து வந்தார்.

நேற்று அவர் உடற்பயிற்சி செய்வதற்காக தளிகுளம் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்துக்கு தனது தந்தையுடன் ஆட்டோவில் சென்றார். பின்பு மைதானத்தில் தனது தோழிகளுடன் ஓடிக்கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.

அதனைப்பார்த்த அவருடன் ஓடிக்கொண்டிருந்த தோழிகளும் மைதானத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்த தந்தை சுரேசும் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் ஆதித்யாவை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழிஅந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். போலீஸ் வேலைக்காக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்ட ஆதித்யா உயிரிழந்தது அவரது நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story