மனநலம் பாதித்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது


மனநலம் பாதித்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது
x

மனநலம் பாதித்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ராமநகர் அரோஹள்ளி பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு மனநலம் பாதிக்கப்பட்ட மகள் உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த தம்பதி, தங்கள் மகளான இளம்பெண்ணை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றனர். இதனால் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இதனை அறிந்த மர்மநபர் ஒருவர், தண்ணீர் கேட்பது போல வீட்டுக்கு வந்தார். அப்போது இளம்பெண் தண்ணீர் கொடுக்க மறுத்துள்ளார். உடனே அங்கிருந்து சென்ற மர்மநபர், சிறிது நேரம் கழித்து அங்கு வந்து வீட்டுக்குள் நுழைந்துள்ளார். பின்னர் இளம்பெண்ணை அவர் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் மர்மநபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதுகுறித்து இளம்பெண் தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபற்றி அரோஹள்ளி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த பெலகாவி மாவட்டம் கானாப்புராவை சேர்ந்த நவீன்ராவ் என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story