பீகார் தேர்தலில் வன்முறைக்கு இடமில்லை - தலைமை தேர்தல் ஆணையர் உறுதி


பீகார் தேர்தலில் வன்முறைக்கு இடமில்லை - தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
x

பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது

பாட்னா,

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு வரும் 11ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே, பீகாரின் மொகமா தொகுதியில் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக துலர் சிங் வாக்கு சேகரித்தார். அவர் ஐக்கிய ஜனதா தளம் நிர்வாகியால் நேற்று கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் நிர்வாகி ஆனந்த் சிங் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், பீகார் தேர்தலில் வன்முறைக்கு இடமில்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தேர்தலின்போது எந்தவிதமான வன்முறைக்கும் இடமில்லை. பீகார் தேர்தல் அமைதியான முறையில், வெளிப்படையான முறையில், சட்டம் - ஒழுங்கை பின்பற்றி நடைபெறும்

என்றார்.

1 More update

Next Story