குடிபோதையில் ரகளை செய்த 10 பேர் கைது


குடிபோதையில் ரகளை செய்த 10 பேர் கைது
x

புதுவையில் குடிபோதையில் ரகளை செய்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

மூலக்குளம்

புதுச்சேரியில் பொது இடங்களில் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். அதன்படி மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ. சாலையில் குடிபோதையில் ரகளை செய்த திருக்கோவிலூரை சேர்ந்த அண்ணாதுரை (வயது 46) என்பவரை மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் கைது செய்தார்.

இதேபோல் ரெட்டியார்பாளையம் பகுதியில் அசோக்குமார் (39), கலைவேந்தன் (27) ஆகியோரும், பெரியகடை பகுதியில் குருசுக்குப்பம் சந்திரசேகர் (42), காலாப்பட்டு பகுதியில் பிள்ளைச்சாவடி சதீஷ் (34), நெட்டப்பாக்கம் பகுதியில் பாக்கம் சூர்யா (21), காட்டேரிக்குப்பம் பகுதியில் பிரசாந்த் (30), மங்கலம் பகுதியில் கீழ்குமாரமங்கலம் விஜய் (22), வில்லியனூர் ஜெயபிரகாஷ் (32), தமிழ்செல்வன் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story