கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது

புதுவையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 பேரை கைது செய்தனர்.
புதுச்சேரி
லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்சர் பாஷா தலைமையிலான போலீசார் இன்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாமிப்பிள்ளைத் தோட்டம் குயில் தோப்பு அருகே சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணையில் அவர்கள், கருவடிக்குப்பம் மகாவீர் நகரை சேர்ந்த தினேஷ் (வயது 30), விழுப்புரம் இந்திரா நகரை சேர்ந்த மணிகண்டன் (34) என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கத்தியையும் பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





