மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது

புதுவையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருபுவனை
திருபுவனை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கலிதீர்த்தாள்குப்பத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் 3 பேர் போலீசாரை கண்டதும் ஓட முயற்சித்தனர். அவர்களை மடக்கி பிடித்தபோது 110 கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் திருபுவனை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த தாமு என்கிற தாமோதரன் (வயது 23), விருத்தாசலம் பகுதியை சேர்ந்த விஷ்வா (21), கோலியனூர் பகுதியைச் சேர்ந்த வசந்த் (19) ஆகியோர் ஆவர். கைதானவர்களில் 2 பேர் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள். கைதான மூவரும் புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story