தட்டிக்கேட்ட மகனை தாக்கிய தந்தை


தட்டிக்கேட்ட மகனை தாக்கிய தந்தை
x

காரைக்கால் அருகே தந்தை குடிபோதையில் மகனை தாக்கினார்.

கோட்டுச்சேரி

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி கீழகாசாகுடி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 50). அவரது மகன் கபிலன் (19).இந்தநிலையில் முருகன் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு சாலையில் செல்வோரை தகாத வார்த்தையால் பேசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் கபிலனிடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்து தந்தை முருகனை, கபிலன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், கபிலனின் கையை பிடித்து கடித்து, மரக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பிசென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் கபிலன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story