குழந்தையுடன் இளம்பெண் மாயம்


குழந்தையுடன் இளம்பெண் மாயம்
x

திருநள்ளாறு அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயமானார்.

திருநள்ளாறு

திருவாரூர் மாவட்டம் கிடாமங்கலத்தை சேர்ந்த கலைஞரின் கனி (வயது27). அவரது மனைவி நிஷா (25). இவர்களுக்கு பிராணேஷ் (5), சஞ்சேஷ் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். கலைஞரின் கனி திருப்பூரில் வேலை பார்த்து வருவதால் நிஷா தனது 2 குழந்தைகளுடன் காரைக்கால் இந்திராநகரில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நிஷா தனது இளையமகன் சஞ்சேசுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான நிஷாவை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story