வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு


வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
x

மின்னணு முறையில் வழக்கு தாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவையில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்தனர்.

புதுச்சேரி

வழக்குகளை இ-பைலிங் (மின்னணு முறை) மூலம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற ஐகோர்ட்டின் உத்தரவுக்கு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு வக்கீல்களுக்கு முறையாக பயிற்சி இல்லாததால் இந்த முறையை 6 மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மத்திய அரசின் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கண்டித்தும், புதிய சட்டங்களின் பெயர்களை அந்தந்த மாநில மொழியிலும், ஆங்கிலத்திலும் சட்ட மசோதாவாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை வக்கீல்கள் 2 நாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இதன்படி இன்று கோர்ட்டு பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் தலைமையில் சங்க கட்டிடத்தில் வக்கீல்கள் நேற்று கூடினர். கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தால் புதுவை கோர்ட்டில் பணிகள் பாதிக்கப்பட்டன. விசாரணைக்கு வந்த வழக்குகள் வேறொரு தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டன.


Next Story