ரத்த சோகை விழிப்புணர்வு முகாம்


ரத்த சோகை விழிப்புணர்வு முகாம்
x

பாகூர் அரசு பள்ளியில் ரத்த சோகை விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.

பாகூர்

பாகூர் கொம்யூன் கீழ்பரிக்கல்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் ரத்த சோகை விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாணவர்களுக்கு ரத்த சோகை மற்றும் ஹிமோகுளோபின் கண்டறியும் பரிசோதனையை பொறுப்பாசிரியர் துரைசாமி தொடங்கி வைத்தார். நலம் மற்றும் சுகாதார மையத்தை செவிலியர் விஜயபாரதி, டாக்டர் மலர்மன்னன், ஆஷா பணியாளர் தேவி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுகடைய உடல் நலம், ரத்தத்தின் தன்மையை எவ்வாறு வைத்திருக்க வேண்டும். அதற்கேற்றார் போல் நம்முடைய பழக்க வழக்கங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என அறிவுரை கூறினார்கள். முடிவில் அறிவியல் ஆசிரியை மாலதி நன்றி கூறினார்.

மேலும் அப்பள்ளியில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த "கைகழுவும் தினம்" கடைப்பிடிக்கப்பட்டது. மாணவர்களுக்கு கைகழுவும் அவசியம் மற்றும் சுகாதாரம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. முடிவில் உடற்கல்வி ஆசிரியை ஜெயபாரதி நன்றி கூறினார்.

1 More update

Next Story