அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்க குழு நிர்வாகிகள் நியமனம்


அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்க குழு நிர்வாகிகள் நியமனம்
x

புதுவையில் அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்க குழு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி

புதுவையில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்த அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் ஆட்சிமன்ற குழு உருவாக்கப்பட்டு உள்ளது.

அதன்படி சங்கத்தின் தலைவராக தலைமை செயலாளரும், துணைத்தலைவராக தொழிலாளர் துறை செயலாளரும், உறுப்பினர்களாக நிதித்துறை, சமூக நலத்துறை, உள்ளாட்சித்துறை செயலாளர்களும், உறுப்பினர் செயலராக தொழிலாளர்துறை ஆணையரும், உறுப்பினர்களாக தொழிலாளர்துறை உதவி ஆணையரும், தொழிலாளர் நல அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தொழிலாளர் துறை சார்பு செயலாளர் ராகிணி வெளியிட்டுள்ளார்.

1 More update

Next Story