பெண்களை கிண்டல் செய்தவர் கைது

பூ. புதுகுப்பம் கடற்கரையில் பெண்களை கிண்டல் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம்
தவளக்குப்பம் அடுத்த பூ.புதுகுப்பம் கடற்கரையில் விடுமுறை நாளான இன்று கூட்டம் கூட்டமாக மக்கள் வந்திருந்தனர். அவர்கள் கடலில் இறங்கி அலைகளில் விளையாடினர். அப்போது பெண்கள் சிலரை அங்கு இருந்த நபர் ஒருவர் கிண்டல் செய்தபடி, தனது செல்போனில் படம்பிடித்துள்ளார்.
இதுபற்றி தவளக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பெண்களை கிண்டல் செய்த நபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே கொண்டரசன் பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story






