கைதான 3 பேரிடம் இருந்து கார், லாரி பறிமுதல்


கைதான 3 பேரிடம் இருந்து கார், லாரி பறிமுதல்
x

மாகியில் மதுபாட்டில்கள் திருட்டு வழக்கில் கைதான 3 பேரிடம் இருந்து கார், டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

மாகி

மாகியில் மதுபாட்டில்கள் திருட்டு வழக்கில் கைதான 3 பேரிடம் இருந்து கார், டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

மதுபாட்டில்கள் திருட்டு

மாகி பள்ளூர் பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி ஷட்டர் கதவை உடைத்து அங்கு இருந்த ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து அந்த கடையின் உரிமையாளர் பிரசாத் என்பவர் மாகி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மனோஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த அஜ்மல் என்கிற சாமா (வயது 29) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

கார், லாரி பறிமுதல்

அப்போது இந்த திருட்டு வழக்கில் கல்லாச்சி ஜாதியேரி பகுதியை சேர்ந்த அப்துல் ஷெரீப், மோட்டா அமீர் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் கைதான 3 பேரிடம் விசாரணை நடத்தியபோது, அவர்களில் மாகி, கேரளா பகுதிகளில் பல்வேறு இடங்களில் வாகன திருட்டுகளில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது.. அதைத்தொடர்ந்து போலீசார் அவரிகளிடம் இருந்து கார், டிப்பர் லாரி, ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story