ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு


ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு
x

புதுவை அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.

புதுச்சேரி

புதுவை அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.

கலந்தாய்வு

புதுவை அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு தொடர்ந்து நடந்து வருகிறது. இதனிடையே அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில் கலந்தாய்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. புதுவை கல்வித்துறை கருத்தரங்க அறையில் நடைபெறும் இந்த கலந்தாய்வில் காரைக்காலில் பணிபுரியும் 17 பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணிவரை கலந்தாய்வு நடக் கிறது.

இணையதளத்தில் வெளியீடு

நேரில் வரமுடியாதவர்கள் 'கூகுள்மீட்' மூலமும் கலந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுவை நகரம், கிராமப்புற பள்ளி மாணவர் களுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணிவரை நடக்கிறது.

இதில் கிராமப்புறத்தை சேர்ந்த 247 ஆசிரியர்கள் மற்றும் நகரப்பகுதியில் உள்ள 520 ஆசிரியர்கள் கலந்துகொள்ள தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் கல்வித்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பதவி உயர்வு

மேலும் அரசு ஆரம்பப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அறிவியல் பிரிவில் 27 பேரும், சமூக அறிவியல் பிரிவில் 7 பேரும், மாகி பிராந்தியத்தில் ஒருவரும் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான கலந்தாய்வு புதுவை கல்வித்துறை கருத்தரங்க அறை, காரைக்கால், மாகி முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை நடக்கிறது.

மேற்கண்ட தகவலை கல்வித்துறை துணை இயக்குனர் வெர்பினோ ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story