தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காரைக்காலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால்

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க.

மணிப்பூர் கலவரத்தை கண்டு கொள்ளாத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து காரைக்காலில் தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்கால் தபால் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாஜிம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

நாக.தியாகராஜன் எம்.எல்.ஏ., வக்கீல் வெற்றிச்செல்வன், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், மணிப்பூர் பழங்குடி இன பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் கலவரத்தை தடுக்காத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி

இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காரைக்கால் மதகடி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில அரசியல் குழு செயலாளர் வணங்காமுடி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மணிப்பூரில் கலவரத்தை கண்டுகொள்ளாத மத்திய, மணிப்பூர் மாநில அரசுகள் உடனே ராஜினமா செய்யவேண்டும். பெண்களை நிர்வாணப்படுத்திய காட்டு மிராண்டிகளை கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


Next Story