பி.எட் 2-ம் ஆண்டு பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு


பி.எட் 2-ம் ஆண்டு பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
x

புதுவை கூட்டுறவு கல்வியியல் கல்லூரியில் பி.எட் 2-ம் ஆண்டு பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லூரியில் 2023-24 கல்வியாண்டில் பி.எட் 2-ம் ஆண்டு பட்டப்படிப்புக்கு சென்டாக் மூலம் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த தகுதியுள்ள மாணவ-மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் கல்லூரி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 4-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்த விண்ணப்பித்தை பூர்த்தி செய்து தேவையான நகல் சான்றிதழ் களுடன் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும். இந்த பி.எட் படிப்பின் சேர்க்கைக்கான கல்வித்தகுதிகள், கட்டண விவரம் ஆகியவை www.ccepdy.in என்ற இணையதள முகவரியிலோ அல்லது அனைத்து அலுவலக நாட்களில் கல்லூரியிலோ தகவல் பெறலாம். தகுதியுள்ள பிற மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு புதுச்சேரி மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கு பின் காலியிடங்கள் இருந்தால் இடங்கள் ஒதுக்கப்படும்.இத்தகவலை கல்லூரி முதல்வர் செந்தில்வினோத் தெரிவித்துள்ளார்.


Next Story