தொழிற்சாலை ஊழியர் படுகாயம்


தொழிற்சாலை ஊழியர் படுகாயம்
x

கோட்டுச்சேரி அருகே சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிற்சாலை ஊழியர் படுகாயமடைந்தார்.

கோட்டுச்சேரி

திருநள்ளாறு அடுத்த வருஷபத்து கோட்டபாடியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 38). தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளியான இவர் வேலை முடிந்து சைக்கிளில் வீடு திரும்பினார்.

சேத்தூர் பெட்ரோல் பங்க் அருகில் சாலையை கடக்க முயன்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாக்கியராஜ், படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தேனூர் சமுதாய நலவழி மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து தொடர்பாக காரைக்கால் வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story