நேபாள தொழிலாளியிடம் ரூ.49 ஆயிரம் மோசடி


நேபாள தொழிலாளியிடம் ரூ.49 ஆயிரம் மோசடி
x

கருத்தரிப்பதற்கு பெண்களை அனுப்பி வைப்பதாக கூறி ஓட்டல் தொழிலாளியிடம் நூதன மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

புதுச்சேரி,

கருத்தரிப்பதற்கு பெண்களை அனுப்பி வைப்பதாக கூறி ஓட்டல் தொழிலாளியிடம் நூதன மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

நேபாள வாலிபர்

மாகியில் ஓட்டல் (தங்கும் விடுதி) நடத்தி வருபவர் ஸ்ரீஜித் (வயது 44). இவரது ஓட்டலில் நேபாள நாட்டை சேர்ந்த ஷஜன் பட்டரய் (34) என்பவர் வேலை பார்த்து வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு போனில் அழைப்பு வந்துள்ளது.

அதில் பேசிய மர்ம நபர், தாங்கள் வடஇந்தியாவில் கருத்தரிக்காத பெண்களுக்கு கருத்தரிப்பு சிகிச்சை மையம் நடத்தி வருவதாகவும் இந்த பணியில் சேர்ந்தால் வருடத்துக்கு ரூ.25 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

ரூ.49 ஆயிரம் மோசடி

இதற்காக கர்ப்பம் தரிக்காத பெண்களை அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய ஷஜன் பட்டரய், அந்த நபர் சொன்னபடி ஆதார் கார்டு, பான்கார்டு, வங்கி கணக்கு விவரங்களை அனுப்பி உள்ளார்.

இதற்காக அட்வான்சாக ரூ.5 லட்சம் அனுப்பியுள்ளதாக கூறி ஸ்கிரீன்ஷாட் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார். மேலும் பணியில் சேருவதற்கான கட்டணமாக ரூ.49 ஆயிரம் கட்ட சொல்லி அந்த நபர் கியூஆர் கோர்டுகளை அனுப்பியுள்ளார்.

அதை உண்மை என்று நம்பிய ஷஜன் பட்டரய் அதை ஸ்கேன் செய்து ரூ.49 ஆயிரத்தை அனுப்பினார். அதன்பின் அவர் தனது வங்கிக்கணக்கை சரிபார்த்தபோது அந்த மர்ம நபர் பணம் எதுவும் அனுப்பாமல் தன்னிடம் இருந்து ரூ.49 ஆயிரத்தை பெற்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த மர்ம நபரை தொடர்புகொள்ள முயற்சித்தார். ஆனால் அது முடியவில்லை.

ராஜஸ்தான் கும்பல்

தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஷஜன் பட்டரய் இதுதொடர்பாக மாகி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் ஷஜன் பட்டரயை ஏமாற்றிய கும்பல் ராஜஸ்தானை சேர்ந்தது என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.


Next Story