பெண்களுக்கு இலவச பஸ்பாஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்


பெண்களுக்கு இலவச பஸ்பாஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
x

புதுவையில் நடந்த மாதர் தேசிய சம்மேளனத்தின் கூட்டத்தில் பெண்களுக்கு இலவச பஸ்பாஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

புதுச்சேரி

மாதர் தேசிய சம்மேளனத்தின் தட்டாஞ்சாவடி தொகுதி பேரவை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு சுமதி, பிரேமா ஆகியோர் தலைமை தாங்கினர். ரேவதி, சந்தியா காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலாளா் சேது செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் புதுச்சேரியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தது போல பெண்களுக்கு இலவச பஸ் பயணம் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். சமையல் கியாஸ் மானிய திட்டத்தை செயல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story