கள உதவியாளர் தேர்வுக்கு ஹால் டிக்கெட்


கள உதவியாளர் தேர்வுக்கு ஹால் டிக்கெட்
x

புதுவை நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் கள உதவியாளர் பணிகளுக்கான எழுத்துதேர்வு வருகிற 8-ந்தேதி நடக்கிறது. இதன் ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துதேர்வு வருகிற 8-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்வை புதுச்சேரியில் 16 தேர்வு மையங்களிலும், காரைக்காலில் 3 மையங்களிலும், மாகியில் ஒரு மையத்திலும், ஏனாமில் 2 மையங்களிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் https://recruitment.py.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுதொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தேர்வர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story