முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஆய்வு கூட்டம்


முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஆய்வு கூட்டம்
x

காரைக்காலில் ரூ.500 கோடியில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுவது குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

புதுச்சேரி

காரைக்காலில் ரூ.500 கோடியில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுவது குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

புதிய மருத்துவக் கல்லூரி

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி காரைக்காலில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டப்படும் என ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்தநிலையில் புதுவை சட்டசபையில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில் காரைக்காலில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை சுமார் ரூ.500 கோடி மதிப்பில் கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்வுக்கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். இதில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தில் மாதிரி வரைபடங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மாதிரி வரைபடம்

கூட்டத்தில் தேசிய கட்டிட கட்டுமான கழக அதிகாரிகள் கலந்துகொண்டு காரைக்காலில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான மாதிரி வரைபடங்களை காட்டி விளக்கி கூறினர். இதற்கு தேவையான நிதி மற்றும் ஒப்புதல் பெற கோப்புகள் தயார் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், நாஜிம், திருமுருகன், கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமிகாந்தன், பி.ஆர்.சிவா, சுகாதாரத்துறை செயலர் பங்கஜ்குமார் ஜா, இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story