தாயாரின் ரூ.32 லட்சம் நகை, பணம் மோசடி


தாயாரின் ரூ.32 லட்சம் நகை, பணம் மோசடி
x

கோட்டுச்சேரியில் தாயாரின் ரூ.32 லட்சம் நகை, பணத்தை மோசடி செய்த மகன் மீது கோர்ட்டு உத்தரவுப்படி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காரைக்கால்

கோட்டுச்சேரியில் தாயாரின் ரூ.32 லட்சம் நகை, பணத்தை மோசடி செய்த மகன் மீது கோர்ட்டு உத்தரவுப்படி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வங்கி கணக்கில் பணம்

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி வரிச்சிக்குடி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் லெபனான் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். காரைக்காலில் உள்ள இவரது தாயார் பத்மாவதியை தம்பி சங்கர் கவனித்து வந்தார்.

பத்மாவதியை கவனித்துக் கொள்வதற்காக இளங்கோவன் மற்றும் அவரது சகோதரர்கள் 4 பேர் மாதந்தோறும் தலா ரூ.3 ஆயிரத்தை சங்கர் வங்கிக்கணக்கில் செலுத்தியதாக கூறப்படுகிறது.

ரூ.25 லட்சம் நகை

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் பத்மாவதி கீழே விழுந்ததில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் வயது முதிர்வால் இறந்துபோய்விட்டார்.

இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய இளங்கோவன், தாயாரின் நகை, பணம் விவரங்களை சரிபார்த்தார். அப்போது தாயாருக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வைர மூக்குத்தி, வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் வங்கிகணக்கில் இருந்த ரூ.7.50 லட்சத்தை சங்கர் மோசடி செய்தது தெரியவந்தது.

மேலும் தாயாரின் பூர்வீக சொத்து தொடர்பான ஆவணங்கள், தாயார் சுயநினைவின்றி இருந்தபோது எழுதி வாங்கியது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து சங்கரிடம் கேட்டபோது, அவர் சரியாக பதில் கூறவில்லையாம்.

நீதிமன்ற உத்தரவு

இது குறித்து கோட்டுச்சேரி போலீசில் இளங்கோவன் புகார் செய்தார். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே காரைக்கால் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர் முறையிட்டார்.

இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்பேரில் கோட்டுச்சேரி போலீசார் சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story