மோட்டார் சைக்கிள் திருட்டு

திருநள்ளாறு அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநள்ளாறு
காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் அலா காலனியைச் சேர்ந்தவர் முகம்மது அலீம். அவரது மனைவி ஜெசிமா. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த முகம்மது அலீம், கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்தார். இதற்கிடையே ஜெசிமாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை முகம்மது அலிம் சிகிச்சைக்காக தஞ்சாவூர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். பின்னர் அவர்கள் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்மநபர்கள் யாரோ மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






