ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு குறித்து கருத்து கேட்பு கூட்டம்


ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு குறித்து கருத்து கேட்பு கூட்டம்
x

காரைக்காலில் உள்ளாட்சி தேர்தலில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசியல் கட்சியினரிடம் கருத்துகேட்பு கூட்டம் நடந்தது.

காரைக்கால்

காரைக்காலில் உள்ளாட்சி தேர்தலில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசியல் கட்சியினரிடம் கருத்துகேட்பு கூட்டம் நடந்தது.

கருத்துகேட்பு கூட்டம்

உள்ளாட்சி தேர்தலில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் இன்று நடைபெற்றது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ஆணையத்தின் தலைவர் நீதிபதி சசிதரன் (ஓய்வு) தலைமை தாங்கினார்.

எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், சிவா, நாக.தியாகராஜன், முன்னாள் மாவட்ட நீதிபதி ராமபத்திரன், சட்ட அதிகாரி ஜான்சி, துணை மாவட்ட கலெக்டர்கள் ஜான்சன், வெங்கடகிருஷ்ணன், உள்ளாட்சித்துறை துணை இயக்குனர் சுபாஷ், நகராட்சி ஆணையர் சத்யா, சமூக நலத்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், பதிவுபெற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். அவர்கள் ஆணையத்திடம் தங்கள் கருத்துகளை பதிவிட்டார்கள்.

17 வார்டுகளில் கணக்கெடுப்பு

மேலும் அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் காரைக்காலில் உள்ள 17 வார்டுகளில் ஓ.பி.சி. பிரிவினர் குறித்து கணக்கெடுப்பு நடைபெறும் என்றும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறும் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த கருத்துகேட்பு மற்றும் கணக்கெடுப்பு உள்ளாட்சி தேர்தலுக்கு மட்டும் தான் எனவும் ஆணையம் அறிவித்தது. இந்த கூட்டத்தில் பதிவு செய்யப்படும் கருத்துகள், அறிக்கையாக தயாரித்து அரசுக்கு அளிக்கப்படும் என ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story