ஓட்டல் மேலாளர் மீது போலீசார் தாக்குதல்


ஓட்டல் மேலாளர் மீது போலீசார் தாக்குதல்
x

மூலக்குளம் அருகே ஓட்டல் மேலாளைர போலீசார் தாக்கினர்.

மூலக்குளம்

மேரி உழவர்கரை பகுதியை சேர்ந்தவர் ரகுவரன் (வயது 26). ஓட்டல் மேலாளர். இவரது மனைவி பெயரில் உள்ள சரக்கு வாகனம், இந்திராகாந்தி சிலை அருகே உள்ள தனியார் நிறுவனத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு சரக்கு ஏற்றுவதற்காக இந்திராகாந்தி சிக்னல் அருகே சரக்கு வாகனம் நின்று கொண்டிருந்தது.

இந்த நிலையில் நள்ளிரவு 12.30 மணிக்கு ரகுவரன் தனது சகோதரர் திலீபன் என்பவருடன் காரில் இருந்தார். அப்போது ரோந்து வந்த ரெட்டியார்பாளையம் போலீசார், இந்த நேரத்தில் ஏன் இங்கே இருக்கிறீர்கள் என்று ரகுவரனிடம் விசாரித்தனர். அப்போது போலீசாருக்கும், ரகுவரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் போலீசார் தாக்கியதில் ரகுவரன் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே ரகுவரன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தும், புகாரை ஏற்க போலீசார் மறுத்துவிட்டனர். இதற்கிடையே ரகுவரனை போலீசார் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


Next Story