ரூ.11.61 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி


ரூ.11.61 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி
x

மணவெளி தொகுதியில் ரூ.11.61 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்

அரியாங்குப்பம்

மணவெளி தொகுதி பூரணாங்குப்பம் வேணுகோபால் நகரில் ரூ.6.89 லட்சம், அங்காளம்மன் நகரில் ரூ.4.72 லட்சம் என மொத்தம் ரூ.11.61 லட்சத்தில் கிராவல் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை இன்று நடந்தது. சபாநாயகர் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர் அகிலன், தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், விவசாய அணி பொதுச்செயலாளர் சக்திபாலன், தவளக்குப்பம் கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story