மனநிலை பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை


மனநிலை பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை
x

கோட்டுச்சேரியில் மனநிலை பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டுச்சேரி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்தவர் ஜோதிபாஸ் (வயது 27). இவரது உறவினர் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியில் வசித்து வருகின்றார். உறவினரின் 21 வயது மகள் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவராம்.

சம்பவத்தன்று கோட்டுச்சேரி உறவினர் வீட்டுக்கு வந்த ஜோதிபாஸ், தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பெண்ணின் தாயார் கோட்டுச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிபாசை கைது செய்தனர்.

1 More update

Next Story