கல்வியியல் கல்லூரி மாணவர்கள் 2-வது முறையாக போராட்டம்


கல்வியியல் கல்லூரி மாணவர்கள் 2-வது முறையாக போராட்டம்
x

கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரி கல்வியியல் கல்லூரி மாணவர்கள் 2-வது முறையாக போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி

புதுவை கூட்டுறவு ஒன்றியம் சார்பில் கல்வியில் கல்லூரி (பி.எட்) நடத்தப்படுகிறது. இந்த கல்லூரி நிர்வாக வசதிக்காக தற்போது கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசு சார்பில் கல்வி கட்டணம் ரூ.5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், கல்லூரி நிர்வாகம் ரூ.51 ஆயிரம் கட்ட சொல்லி அறிவுறுத்தியது. இது தொடர்பாக ஏர்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டசபையை முற்றுகையிட்டு முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மாணவிகள் பேசினார்கள். அப்போது அவர், ரூ.5 ஆயிரம் வசூலிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இந்தநிலையில் நேற்றும் கல்வி கட்டணமாக ரூ.51 ஆயிரம்தான் என்று நிர்வாக தரப்பில் மாணவ, மாணவிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் சட்டசபைக்கு பெற்றோருடன் வந்த அவர்கள், அங்கு முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கட்டண விவகாரம் தொடர்பாக புகார் தெரிவித்தனர். அப்போது அமைச்சர் நமச்சிவாயமும் உடனிருந்தார். இதைத்தொடர்ந்து அதிகாரிகளை அழைத்து பேசிய முதல்-அமைச்சர் ரங்கசாமி, ரூ.5 ஆயிரம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பின்னரே மாணவ, மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story