என்ஜினீயரை தாக்கி கொலை மிரட்டல்


என்ஜினீயரை தாக்கி கொலை மிரட்டல்
x

பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் என்ஜினீயரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு செய்தனர்.

புதுச்சேரி

புதுவை வம்பாகீரப்பாளையம் ஏழை மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கிஷோர் (வயது30). இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு சுற்றுலா படகு வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர் (26) என்பவர் ரூ.3 ஆயிரம் கடன் வாங்கியதாக தெரிகிறது. அந்த பணத்தை திருப்பிக்கேட்டபோது சுரேந்தர் இழுத்தடித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று இரவு முத்து மாரியம்மன் கோவில் அருகே கிஷோர் நின்று கொண்டிருந்தபோது, சுரேந்தர் தனது நண்பர்கள் புவிவேந்தன் (25), பவித்ரன் (25) ஆகியோருடன் வந்து அவரை செங்கல், பிளாஸ்டிக் நாற்காலியால் தாக்கி பணத்தை கொடுக்க முடியாது. மீறி கேட்டால் கொலை செய்துவிடுவோம் எனமிரட்டல் விடுத்து தப்பிச்சென்றனர்.

புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் பவித்திரன், புவிவேந்தன், சுரேந்தர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story