மூதாட்டி வீட்டில் 5 பவுன் நகை திருட்டு


மூதாட்டி வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
x

திருநள்ளாறில் மூதாட்டி வீட்டில் 5 பவுன் நகை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருநள்ளாறு

திருநள்ளாறில் மூதாட்டி வீட்டில் 5 பவுன் நகை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஆடு மேய்க்கும் தொழிலாளி

திருநள்ளாறை அடுத்த சேத்தூர் கிராமத்தில் உள்ள காமாட்சி நகரைச்சேர்ந்தவர் அங்காளம்மாள் (வயது65). இவர் சில ஆடுகளை மேய்த்து, அதில் வரும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

கடந்த 30-ந்தேதி, திருத்துறைபூண்டியில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்திற்கு, தனது 5 பவுன் நகையை அணிந்து சென்றார். மறுநாள் வீட்டுக்கு வந்ததும், நகையை பீரோவில் வைத்து பூட்டிவிட்டு, சாவியை வீட்டின் ஒரு பகுதியில் வைத்துள்ளார்.

5 பவுன் நகை திருட்டு

தொடர்ந்து, மறுநாள் முதல் வழக்கம் போல் வீட்டை பூட்டி சாவியை, வீட்டின் மின்சார மீட்டர் பாக்ஸ் மீது வைத்து விட்டு ஆடுகளை மேய்க்க சென்றுவிட்டார். அங்காளம்மாள் வீட்டு சாவியை மீட்டர் பாக்ஸ் மீது வைப்பது சிலருக்கு தெரியும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று வீட்டுக்கு வழக்கம்போல சென்ற அங்காளம்மாள் வீட்டு சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டுக்குள் சென்றார். அப்போது வீட்டு பீரோவில் அதன் சாவி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த 5 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. யாரோ திருட்டு ஆசாமி, மூதாட்டி வீட்டு சாவி வைக்கும் இடத்தை நோட்டமிட்டு அதை எடுத்து கதவை திறந்து நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

புகாரின் பேரில் திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை திருடிய மர்ம ஆசாமி யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story