புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x

புதுவையில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

நெட்டப்பாக்கம்

புதுவை நெட்டப்பாக்கம் பகுதியில் பள்ளி, கல்லூரி அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், சிகரெட் விற்றதாக இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று பண்டசோழநல்லூர் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக அந்த பகுதியை சேர்ந்த ராமசாமி (வயது 53) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1,500 மதிப்புள்ள புகையிலை பொருட்கள், சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story