பொதுமக்களிடம் ரகளை; வாலிபர் கைது


பொதுமக்களிடம் ரகளை; வாலிபர் கைது
x

புதுவையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் நேற்று வழுதாவூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் வாலிபர் ஒருவர் குடிபோதையில் நின்று கொண்டு பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் சண்முகாபுரம் பகுதியை சேர்ந்த அருள்பாண்டியன் (வயது 23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story