40 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு


40 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
x

முதலியார்பேட்டையில் விளம்பர பலகை அமைக்கும் போது 40 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

புதுச்சேரி

முதலியார்பேட்டையில் விளம்பர பலகை அமைக்கும் போது 40 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

வெல்டிங் தொழிலாளி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கார்த்திகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 38). வெல்டிங் தொழிலாளி. அவரது மனைவி பவித்ரா. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரி 100 அடி ரோட்டில் உள்ள கபூர் மார்பிள் கம்பெனியில் விளம்பர பலகை அமைக்கும் பணிக்காக சதீஷ் புதுச்சேரி வந்தார். நேற்று சுமார் 40 அடி உயரத்தில் இரும்பு மேற்கூரையில் மீது விளம்ப பலகை அமைப்பதற்காக வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

3 பேர் மீது வழக்கு

அப்போது எதிர்பாராத விதமாக மேற்கூரை சரிந்து விழுந்ததில் சதீஷ் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் விசாரணை நடத்தினார். அப்போது அவர் பாதுகாப்பு உபகரணம் எதுவும் அணியாமல் வேலை பார்த்ததால் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கபூர் மார்பிள்ஸ் உரிமையாளர் லோகேஷ், விளம்பர ஒப்பந்ததாரர் இளையராஜா, விளம்பர பலகை உரிமையாளர் மகேஷ் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story