தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 7 Aug 2024 5:00 PM IST (Updated: 7 Aug 2024 5:35 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடதமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.

இதற்கிடையே மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், தருமபுரி, கரூர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story