தெற்கில் விடியல் பிறந்தது போல், விரைவில் இந்தியாவிற்கு விடியல் பிறக்கும்: இளைஞரணி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்


தினத்தந்தி 21 Jan 2024 9:19 AM IST (Updated: 19 Sept 2024 5:24 PM IST)
t-max-icont-min-icon

திமுக இளைஞர் அணி மாநில மாநாட்டில் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

சேலம்,

Live Updates

  • 21 Jan 2024 6:20 PM IST

    தெற்கில் விடியல் பிறந்தது போல், விரைவில் இந்தியாவிற்கு விடியல் பிறக்கும். திமுக இளைஞரணியை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இளைஞரணி படையை பார்த்த பின் எனக்கு 20-வயது குறைந்தது போல் உள்ளது. ஒரு மாநாட்டை எப்படி நடத்த வேண்டும் என்பதில் கே.என்.நேரு வழிகாட்டியாக இருக்கிறார். நேரு என்றால் மாநாடு..மாநாடு என்றால் நேரு. எந்த கொம்பனாலும் திமுகவை வீழ்த்த முடியாது.

  • 21 Jan 2024 5:47 PM IST

    நம்மிடம் அதிகம் வரியை பெற்றுக்கொண்டு மத்திய அரசு குறைந்த தொகையை தருகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்ட மரியாதை நான் கொடுத்துவிட்டேன். ஆனால், நாம் கேட்ட நிதியை ஒருபைசா கூட திருப்பி கொடுக்கவில்லை- அமைச்சர் உதயநிதி

  • 21 Jan 2024 5:14 PM IST

    இளைஞரணி முதன் முதலில் தொடங்கப்பட்டது திமுகதான். இளைஞர்கள் தீக்குச்சி போன்றவர்கள்- திருச்சி சிவா எம்.பி திமுக இளைஞரணி மாநாட்டில் பேச்சு

  • 21 Jan 2024 4:48 PM IST

    சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் முதல்வருக்கு செங்கோலை அளித்தனர்.

  • 21 Jan 2024 4:29 PM IST

    தமிழகத்தில் உயர் கல்வி படிப்போரின் சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

  • 21 Jan 2024 3:17 PM IST



  • 21 Jan 2024 12:56 PM IST

    சேலத்தில் நடைபெற்றுவரும் திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

  • 21 Jan 2024 12:03 PM IST

    சேலத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டில் தந்தை பெரியார் சிலைக்கு முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

  • 21 Jan 2024 11:04 AM IST

    சேலத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டில் தமிழ் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story