அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு


அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 13 July 2024 1:37 PM IST (Updated: 13 July 2024 1:43 PM IST)
t-max-icont-min-icon

சென்னை அண்ணா அறிவாலயம் வந்திருந்த அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

சென்னை,

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா 94,992 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தி.மு.க தொடர்ந்து முன்னிலை பெற்று வருவதால் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தி.மு.க.வினர் கொண்டாடி வருகிறார்கள்.

அதேபோல அண்ணா அறிவாலயத்திலும் தி.மு.கவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்ணா அறிவாலயம் வந்த தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அங்கு திரண்டிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சென்னை அண்ணா அறிவாலயம் வந்திருந்த அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப்பிரிவில் அமைச்சர் துரைமுருகனை அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

1 More update

Next Story