சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை


சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை
x
தினத்தந்தி 18 July 2024 6:27 PM IST (Updated: 18 July 2024 6:27 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.

சென்னை தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.


Next Story