கனமழை காரணமாக வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை


கனமழை காரணமாக வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 26 Jun 2024 6:38 AM IST (Updated: 26 Jun 2024 12:10 PM IST)
t-max-icont-min-icon

கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோவை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வால்பாறை பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (ஜூன் 26) ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளிலும் நேற்று இரவு முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதையடுத்து கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story