அதிமுக சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு

எடப்பாடி பழனிசாமி தங்களது தொகுதியில் போட்டியிட 2,187 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை
அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் கடந்த 15-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வாங்கும் பணி நடைபெற்றது. 25-ம் தேதி வரை இந்த பணிகள் நடந்து முடிந்த நிலையில், கட்சியினரின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த 28-ம் தேதி முதல் மீண்டும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. கடந்த 4 நாட்களாக அதிமுக நிர்வாகிகள் தலைமைக்கழகத்தில் விருப்ப மனுக்களை வாங்கி விண்ணப்பித்து அளித்தனர். நேற்று விருப்ப மனு வாங்குவதற்கு கடைசி நாள் என்பதால் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் பலரும் திரண்டு விருப்ப மனுக்களை வாங்கி விண்ணப்பித்தனர்.
இந்தநிலையில், அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டுமெனெ 2,187 விருப்ப மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






