தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை


தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை
x

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 26-ம் தேதி 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதில் ராமேசுவரம் வேர்க்கோடு பகுதியை சேர்ந்த ஜெர்சிஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பாக்கியராஜ், சவேரியார் அடிமை, முத்து களஞ்சியம், எபிரோன், ரஞ்சித், பாலா, யோவான், இன்னாசி, அர்னாட்ரிச்சே, கிறிஸ்து, அந்தோணி ஆகிய 11 மீனவர்களும் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது, 2 ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரத்தை சேர்ந்த இந்த விசைப்படகு மற்றும் அதில் இருந்த 11 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி சிறைபிடித்து கைது செய்தனர். தொடர்ந்து மன்னார் கோர்ட்டில் 11 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 9-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து வவுனியா சிறையில் 11 பேரும் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி இலங்கைக்கு செல்லவுள்ள நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் 11 பேரை நிபந்தனையின்றி விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story