தூத்துக்குடியில் 112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


தூத்துக்குடியில் 112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

தூத்துக்குடி போலீசார் செய்துங்கநல்லூர் அருகில் உள்ள ஒரு கொரியர் சர்வீஸின் குடோனை சோதனை செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, நேற்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து வாகனம்-I சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தனசேகர் மற்றும் காவலர் ஆறுமுகநயினார் ஆகியோர் செய்துங்கநல்லூர் அருகில் உள்ள ஒரு கொரியர் சர்வீஸின் குடோனை சோதனை செய்தனர்.

அதில் அங்கு சந்தேகப்படும்படி பெங்களூரில் இருந்து வந்த 5 பார்சல்களை பிரித்துபார்க்கும் போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக மேற்சொன்ன போலீசார் சுமார் 112 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story