திருநெல்வேலியில் 12 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது


திருநெல்வேலியில் 12 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது
x

முன்னீர்பள்ளம், ஆயன்குளம் பாலத்தின் அருகே சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம், ஆயன்குளம் பாலத்தின் அருகே சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆழ்வாநேரி, நடுத்தெருவை சேர்ந்த டேவிட் (வயது 33) என்பவர் வந்த மோட்டார் பைக்கை சோதனை செய்து பார்த்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு டேவிட்டை நேற்று கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 12 கிலோ 375 கிராம் புகையிலை பொருட்களையும், மோட்டார் பைக்கையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தார்.

1 More update

Next Story