மனவளர்ச்சி குன்றிய 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - 2 பேர் கைது

மனவளர்ச்சி குன்றிய சிறுமி தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட இந்த சிறுமியை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதை சிறுவன் தனது நண்பரான பாபநாசம் பகுதியை சேர்ந்த அஜித்குமாரிடம்(28) கூறினான்.
இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதே சிறுமியை அஜித்குமாரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த சிறுமி கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையை தொடர்ந்து 17வயது சிறுவன் மற்றும் அஜித்குமாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனவளர்ச்சி குன்றிய 17 வயது சிறுமியை 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






