நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x

டவுண் பகுதியில் 2 வாலிபர்கள் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகரம், டவுண் பகுதியில் 2 வாலிபர்கள் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) பிரசன்னகுமார், போலீஸ் உதவி கமிஷனர் (டவுண் சரகம்) அஜுக்குமார் மற்றும் திருநெல்வேலி டவுண் இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி, திருநெல்வேலி டவுண், ஜெயபிரகாஷ் தெருவை சேர்ந்த ஜானகிராமன் மகன் ஐயப்பன் (வயது 21), திருநெல்வேலி, பழையபேட்டை, காந்திநகரை சேர்ந்த நாகராஜன்(எ) ராஜாமணி மகன் சஞ்சய்(19) ஆகிய 2 பேரும் இன்று (9.7.2025) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.

1 More update

Next Story