தீபாவளியை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் அரசு பஸ்களில் 3 லட்சம் பேர் பயணம்


தீபாவளியை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் அரசு பஸ்களில் 3 லட்சம் பேர் பயணம்
x
தினத்தந்தி 18 Oct 2025 7:49 AM IST (Updated: 18 Oct 2025 7:49 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளியை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் அரசு பஸ்களில் 3 லட்சம் பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சென்னை


தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் (திங்கட்கிழமை) நாடுமுழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அரசு அலுவலகங்கள், ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் வாரவிடுமுறை என்பதால், மொத்தம் 3 நாட்கள் தீபாவளி விடுமுறை கிடைக்கிறது. தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடலாம் என்ற எண்ணத்தில் சிலர் மேலும் 2 நாட்கள் விடுமுறை எடுத்து சொந்த ஊர்களுக்கு பயணிக்கவும் செய்கின்றனர்.

சென்னையை பொறுத்தவரையில், வெளிமாவட்டங்களிலிருந்து பணிக்காகவும், படிப்புக்காகவும் அதிகளவில் மக்கள் தஞ்சமடைந்திருக்கின்றனர். அவர்களெல்லாம் இதுபோன்ற பண்டிகைகாலங்களில் சொந்த ஊர்களுக்கு பயணிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதன்படி, சென்னையில் இருந்து நேற்று முன்தினம் முதல் மக்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி 20,378 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதன்படி, நேற்றுமுன்தினம் முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சென்னையில் இருந்து மட்டும் 14,268 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் அரசு பஸ்களில் 3 லட்சம் பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துத் துறை, தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பஸ்களின் இயக்கம் நேற்று (17.10.2025) நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும்பஸ்களின் எண்ணிக்கையான 2,092 பஸ்களில் 2,092 பஸ்களும் 1,975 சிறப்புப் பஸ்களும் இயக்கப்பட்டு ஆக கடந்த (16.10.25 முதல் 17.10.25 வரை) நேற்று நள்ளிரவு 12 மணி வரை 6,920 பஸ்களில் 3,59,840 பயணிகள்பயணித்துள்ளனர். மேலும் இதுவரை 1,39,400 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படும் பஸ்களில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

1 More update

Next Story