தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல்

கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு ஈர்க்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல்
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபியில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்த தகவல் தொழில்நுட்ப அணி தமிழகம் முழுவதும் தி.மு.க.வின் கொள்கை, கோட்பாடுகளை, மக்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியின் காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு ஈர்க்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் போதிய இடவசதி கிடைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்காத அளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com