கார், பைக் மீது லாரி மோதியதில் 4 பேர் பலி - தர்மபுரியில் சோகம்


கார், பைக் மீது லாரி மோதியதில் 4 பேர் பலி - தர்மபுரியில் சோகம்
x
தினத்தந்தி 16 Dec 2025 5:32 PM IST (Updated: 16 Dec 2025 5:55 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த பைக், கார் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

தர்மபுரி


தர்மபரி மாவட்டம் தொப்பூர் அருகே சேலம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது லாரி, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த பைக், கார் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story