படகு மூலம் இலங்கைக்கு தப்ப முயன்ற 4 அகதிகள் கைது

கைதான 4 பேரும் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
படகு மூலம் இலங்கைக்கு தப்ப முயன்ற 4 அகதிகள் கைது
Published on

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் இலங்கையில் இருந்து வந்த ஏராளமான இலங்கை தமிழர்கள் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கள்ளத்தனமாக படகு மூலம் இலங்கைக்கு தப்பி வந்த 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த 4 பேரும் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி இருந்ததாகவும், கள்ளத்தனமாக படகு மூலம் மீண்டும் இலங்கைக்கு தப்பி சென்றபோது சிக்கியதும் தெரியவந்தது. இவர்கள் எந்த முகாமில் தங்கி இருந்தவர்கள்? ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக தப்பி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் பகுதியிலிருந்து சென்றார்களா? என உளவு பிரிவு போலீசாரும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com